Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சு.க.வை வீழ்த்த சதித்திட்டம் தீட்டும் இருவர் யார்? – தயாசிறி தகவல்

In இலங்கை
Published: 10:21 GMT, Dec 6, 2017 |
0 Comments
1279
icon_com
This post was written by : Varshini

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் விருப்பத்துடன் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போhர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”தனியாக கட்சி அமைக்குமாறு நாம் யாருக்கும் கூறவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ உருவாகினார். அவருக்கு வேறு கட்சிகள் கிடையாது. இந்நிலையில், எனக்கு தெரிந்த வகையில் எம்முடன் இணைந்து பணியாற்ற மஹிந்த ராஜபக்ஷ விருப்பத்துடன் உள்ளார். ஜனாதிபதி மைத்திரிக்கும் இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு பலர் விருப்பம் தெரிவித்தனர். அத்தோடு, ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து விலகாமல், அதே சந்தர்ப்பத்தில் தனித்து போட்டியிட தினேஸ் குணவர்தன உள்ளிட்ட சிலர் கோரிக்கை விடுத்தனர். அதற்கும் நாம் அனுமதியளித்துள்ளோம்.

ஆனால், சிலர் அரசியல் நோக்கம் கருதி விருப்பமின்றி உள்ளனர். அரசியல் டீல்கள் இவற்றிற்கு காரணமாக இருக்கலாம். கூடிய விரைவில் அவர்களது பெயரை கூறுகின்றேன். இவ்வாறு குழப்பம் விளைவித்து, ஆட்சியை கவிழ்க்கலாம் என இருவர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவோ பஷில் ராஜபக்ஷவோ அல்லர். கட்சி தலைவர்கள் என்ற பெயரில் இருவர் உள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை தவிர வேறு கட்சியினருக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஆதரவு வழங்குவதற்கு தடை விதித்துள்ளோம். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் இதனை மீறி செயற்பட முடியாதென சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)