Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு பிரச்சினையைத் தீர்ப்பதில் கொரிய உறவு தங்கியுள்ளது – தென்கொரியா

In உலகம்
Updated: 04:59 GMT, Jan 2, 2018 | Published: 04:59 GMT, Jan 2, 2018 |
0 Comments
1234
This post was written by : Suganthini

கொரிய உறவுகளுக்கிடையிலான மேம்பாடு, வடகொரியாவின் அணுசக்தித்திட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தொடர்புபட்டுள்ளதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுடன் உறவை வலுப்படுத்த விரும்புவதுடன், எதிர்வரும் பெப்ரவரியில் தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வையிட்டு  வடகொரியாவிலிருந்து குழுவொன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளதாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

வடகொரிய ஜனாதிபதியின் இந்தக்  கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக தென்கொரிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவின் மேம்பாடானது, வடகொரியாவின் அணுசக்தித்திட்டப் பிரச்சினையைத் தீர்ப்பதில் தங்கியுள்ளது’ என்றார்.

‘வடகொரியாவின் அணுசக்தித்திட்டத்தைக் காரணங்காட்டி, தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையிலான உறவை பிரித்துவிட முடியாது. ஆகவே, கூட்டணி நாடுகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் எமது வெளிவிவகார அமைச்சு ஒத்துழைத்து நடக்க வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg