Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடக ஒழுக்கக் கோவையில் பிரதமர் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 05:33 GMT, Jan 2, 2018 |
0 Comments
1160
This post was written by : Risha

அரசியலமைப்பின்படி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டார்.

அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் குறித்த பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த பிரேரணை நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதன் மூலம் குறித்த ஊடக நடைமுறைகள் சட்டபூர்வமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக ஒழுக்கக் கோவையை சட்டபூர்வமாக்க நடவடிக்கை: பிரதமர் இன்று கைச்சாத்து

அரசியலமைப்பின்படி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திடவுள்ளார்.

அலரி மாளிகையில் வைத்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பிரேரணையில் கையெழுத்திடுவார் என பிரதமர் அலுவலகத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் குறித்த பிரேரணையில் கையெழுத்திட்ட பின்னர், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் பெற்ற இப்பிரேரணைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதன் மூலம் குறித்த ஊடக நடைமுறைகள் சட்டபூர்வமாக்கப்படும்.

அதனை தொடர்ந்து குறித்த ஊடக ஒழுக்கக்கோவை அனைத்து ஊடகங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்படும்.

இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் அனைத்து தேர்தல்களிலும் ஊடகங்களின் பயன்பாடு பாரபட்சமின்றி காணப்படுவது உறுதிபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg