Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களால் தூக்கியெறியப்படும் நிலை உருவாகும்: ஊடகங்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 05:17 GMT, Jan 8, 2018 | Published: 05:17 GMT, Jan 8, 2018 |
0 Comments
2781
This post was written by : Risha

போலியான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களால் ஊடகங்கள் தூக்கியெறியப்படும் நிலை ஏற்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஓஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான பொதுகூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனைவிட ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. இவ்வாறிருக்க ஒற்றையாட்சிக்கு நாங்கள் இணங்கியதாக ஊடகங்கள் தொடர்ந்து போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்ககூடாது. மேலும் சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றியடைய இயலாது என சொல்கிறார்கள். ஊடகங்களுக்கு பயந்து நாங்கள் மக்களிடம் சென்று பொய் சொல்ல இயலாது.

70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் சொல்லணா துயரங்களை சந்தித்தார்கள். அந்த துயரங்க ளுக்கு ஒரு தீர்வினை காணவேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சித்து கொண்டிருக்கையில், சில அரசியல் தரப்புக்களைப்போல் ஊடகங்களும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்தவேண்டும், நீங்களாக திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள். மக்களாக ஊடகங்களை தூக்கி எறியும் நிலை உருவாகும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg