Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடற்படைக் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சர் விஜயம்

In இந்தியா
Updated: 04:50 GMT, Jan 10, 2018 | Published: 04:50 GMT, Jan 10, 2018 |
0 Comments
1154
This post was written by : JudeDanish

இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற கப்பலுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, பாதுகாப்பு அமைச்சருக்கு வரவேற்பளித்திருந்தார்.  இந்தியாவின் மேற்கு கடற்கரையில் நங்கிரமிட்டுள்ள போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்ற கடற்படைக் கப்பல் தொடர்பில் கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைந்திருந்தது.

இதன்போது கடற்படை அதிகாரிகளினால் அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதேவேளை கடற்படையினரால் குண்டுகள் வெடித்து மரியாதை நிகழ்வும் நடத்தப்பட்டது.  இதில் பத்து போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், உட்பட போர் விமானங்கள், ஹெலிகப்டர்கள் பலவும் பங்கேற்றிருந்தன. இந்த நிலையில் கடற்படையின் போர் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சருக்கு விளக்கமிளக்கப்பட்டது.

இதனையடுத்துக் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா, இந்திய கடற்படை உலகத் தரம் வாய்ந்த நிலையில் இருப்பதாகவும், கடற்படையினர் திறமையாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  இதேவேளை 2018 ஆம் ஆண்டு போர் விமானங்களைத் தாங்கிச் செல்லும் கப்பல் ஒன்றை இந்தியா தயாரிக்கும் என பிரதமர் மோடி, தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg