Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிமலை வெடிக்கும் அபாயம்: எச்சரிக்கையுடன் சிலி மக்கள்

In உலகம்
Updated: 06:08 GMT, Jan 11, 2018 | Published: 06:08 GMT, Jan 11, 2018 |
0 Comments
1304
This post was written by : Risha

சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளமை சிலி அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எரிமலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பாக அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளனர்.

எரிமலை வெடிப்பு தொடர்பாக கமராக்களை பொருத்தி ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், எரிமலையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகள் பாரிய வெடிப்பிற்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆர்ஜன்டீன எல்லையை அண்மித்த பிராந்தியத்தில் குறித்த எரிமலை காணப்படுவதால், வெடிப்பு ஏற்படின் அதன் தாக்கம் ஆர்ஜன்டீனாவிலும் பெரிதும் உணரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg