Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 07:37 GMT, Jan 11, 2018 |
0 Comments
1121
This post was written by : Elakkiya

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அக்கரபத்தனை ஹோல்மூட் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இணைந்து நேற்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, தோட்ட தொழிலாளர்கள் நாள் சம்பளத்திற்கு 18 கிலோ தேயிலை பறிக்க வேண்டும் என்ற நிலையே காணப்படுகின்றது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரைநாள் சம்பளமே வழங்கப்படுகின்றது. வரட்சியான காலநிலையிலும் இவ்வாறு 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தேயிலை தோட்டங்கள் காடாக மாறியுள்ளதுடன் தேயிலை கொழுந்து பறிக்க முடியாத நிலையே காணப்படுவதாகவும் தெரிவிக்கும் தொழிலாளர்கள், தேயிலை கொழுந்தினை மாத்திரம் பெற்றுக்கொண்டு தோட்டங்களை காடாக்கி வரும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, தேயிலை மலைகள் காடாக மாறியுள்ளதால் சிறுத்தை மற்றும் குளவிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனால் நாளாந்தம் அச்சத்துடனேயே தமது தொழிலை செய்யவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், விசப் பூச்சிகள் உட்பட வன விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், தமது பிரச்சினைகளுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினை பெற்றுத்தராவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

DSC00374 DSC00370 DSC00372 DSC00380

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)