Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கம் தள்ளாடுவதால் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையில்லை – தொண்டமான்

In இலங்கை
Updated: 07:36 GMT, Jan 12, 2018 | Published: 07:36 GMT, Jan 12, 2018 |
0 Comments
1131
This post was written by : Arul Jesu

நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தும் நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத தன்மை நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று தலவாக்கலை நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய தொண்டமான், மூன்று வருடங்களுக்கு முன்னர் மலையக தலைவர்களை நம்பி வாக்களித்தன் எதிர்விளைவை தற்போது மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், மலையக மக்களை ஆட்சி செய்ய மலையக தலைவர்களை தெரிவு செய்ய வேண்டியது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தனது காலத்தில் ஹட்டனில் பல முறையான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் இன்று அவ்வாறு இடம்பெறுவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg