Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக ஐ.நா. அறிக்கையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை! – மைத்திரி

In இலங்கை
Updated: 06:27 GMT, Feb 7, 2018 | Published: 06:27 GMT, Feb 7, 2018 |
0 Comments
1284
This post was written by : Varshini

இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும்போது அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு நாடுகள் பல தடைகளை உருவாக்க முயற்சித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, குறிப்பாக பொருளாதார தடைகளை விதிக்க முனைப்புகள் காணப்பட்டதாக கூறினார்.

அதன் காரணமாகவே பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை இடையில் முறித்துக்கொண்டு தேர்தலுக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர், மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா.விடம் கால அவகாசம் கோரியதாகவும், அப்போது வழங்கப்பட்ட மூன்று மாத கால அவகாசத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயங்களை செயற்படுத்தியமை, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தமை, சுயாதீன நீதிமன்ற நடவடிக்கை என பல முன்னேற்றகரமான விடயங்களை முன்னெடுத்ததன் காரணமாக இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட அறிக்கையின் தாக்கம் குறைக்கப்பட்டு, அந்த அறிக்கை மீள சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இதற்கு நல்லாட்சியே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறு சர்வதேசத்திலிருந்து எழுந்த சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் போன காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி தனது பதவியைத் துறக்க நேரிட்டதென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நல்லாட்சியில் பிரதமரின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர் வினவியபோது, பிரதமரின் சிறந்த விடயங்கள் பல காணப்பட்டாலும் தீமையான பல்வேறு விடயங்கள் உள்ளதென ஜனாதிபதி மைத்திரி இதன்போது குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg