Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்ஸ்வெல்லின் அதிரடி சதத்துடன் இங்கிலாந்தை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 12:11 GMT, Feb 7, 2018 | Published: 12:11 GMT, Feb 7, 2018 |
0 Comments
1273
This post was written by : Elakkiya

மக்ஸ்வெல்லின் அதிரடி சதத்துடன் முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் இரண்டாவது போட்டியாக ஹோபார்ட்டில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஒவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணியின் எதிர்ப்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க மாலன் மாத்திரம் 50 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கையளித்தார்.

பந்து வீச்சில் மக்ஸ்வெல் 3 விக்கட்டுக்களையும், அஸ்டன் ஆகர் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 256 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடி அவுஸ்திரேலிய அணி, 18.3 ஒவர்கள் நிறைவில் 5 விக்கடடுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 103 ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

பந்து வீச்சு துடுப்பாட்டம் இரண்டிலும் சிறப்பாக செயற்பட்ட மக்ஸ்வெல்  போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

இதன்மூலம் முத்தரப்பு தொடரின், முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணி, முன்னிலை பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg