Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தர்மயுத்தத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது: துணை முதல்வர்

In இந்தியா
Updated: 08:13 GMT, Feb 8, 2018 | Published: 08:13 GMT, Feb 8, 2018 |
0 Comments
1139
This post was written by : Kemasiya

தர்மயுத்தத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் அ.தி.மு.கவை தொண்டர் இயக்கமாக மாற்றி விட்டதாகவும் தேனியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பிக்கும் போதே தொண்டர்கள் இயக்கமாக ஆரம்பித்தார். அதனை அம்மா ஜெயலலிதாவும் நேராக வழிநடத்தினார்.

அந்த வழியில் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆகிய நாமும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை தொண்டர்கள் ஆட்சியாக வழிநடத்தி வருகிறோம். இது நிலையான ஆட்சியாக இடம்பெறுகிறது  என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg