Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டுபாயில் அமையும் முதல் இந்து ஆலயம்: அடிக்கல் நாட்டினார் மோடி- (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 04:11 GMT, Feb 11, 2018 | Published: 04:11 GMT, Feb 11, 2018 |
0 Comments
1738
This post was written by : Kemasiya

டுபாயின் தலைநகர் அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்து ஆலயத்திற்கான உருவத்தோற்றத்தை வெளியிட்டதோடு, அடிக்கல்லை நாட்டிவைத்தார் இந்தியப் பிரதமர் மோடி.

மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான தனது விஜயத்தின் ஒருகட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டுபாயை சென்றடைந்த மோடி, அங்கு டுபாய் தலைநகர் அபுதாபியில்  இந்து ஆலயத்தை கட்டுவதற்கான ஆயத்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் டுபாயில் வசிக்கும் இந்திய வாழ் மக்களையும் பிதரமர் மோடி சந்தித்து உரையாற்றியிருந்தார். இதன்போது பேசிய மோடி, “ குறித்த  இந்து ஆலயத்தை அமைப்பதற்கு 1.25பில்லியன் செலவாகுவதாகவும். அதற்கு ஒத்துழைத்த இந்திவம்சாவழியினருக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆலயம் 55,000 சதுர மீட்டர் நிலத்தில் கட்டப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டுக்குள் ஆலயத்தின் பணிகள் நிறைவடைந்துவிடும். இதற்கு ஒத்துழைத்த டுபாய் இளவரசருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் இந்து ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார் மோடி

அபுதாபியில் முதல்தடவையாக அமையவுள்ள இந்து ஆலயம் ஒன்றிற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக டுபாய்க்கு சென்ற மோடி, அங்கு பட்டத்து இளவரசர் அல் நெஹாயானுடன் இருதரப்பு உறவுநிலை குறித்தும் பேசினார்.

தொடர்ந்து ரயில்வே, எரிசக்தி, நிதி, உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இந்தியப் பிரதமர் தொடர்ந்து அங்கு அமையவுள்ள இந்து ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று டுபாய் வாழ் இந்தியர்களை சந்தித்து    உரையாற்றவுள்ளார் பிரதமர்.

இதேவேளை நேற்றைய தினம் பலஸ்தீனம் சென்ற பிரதமர் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

ghkgk dzxgsdg dfsadf

dhdthj ghkgk

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg