Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும்: மஹிந்த

In இலங்கை
Published: 05:37 GMT, Feb 12, 2018 |
0 Comments
1375
This post was written by : Risha

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையை சுமூகமாக்குவதற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசியலமைப்பின்படி நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாது எனத் தெரிவித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த மஹிந்த, அதனாலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை கோருகிறோம் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த மஹிந்த,

இவ்வளவு குறுகிய காலத்தில் மக்களின் ஆதரவைப் பெற்று அடைந்துள்ள வெற்றியானது வரலாற்று சிறப்புமிக்கது.

இந்த வெற்றியின் பின்னால் பல விடயங்கள் உள்ளன. நாட்டை பிரிப்பதற்கு எதிராகவும், நாட்டின் சொத்துக்களை விற்பதற்கு எதிராகவும், மக்களை மிகவும் பாதித்த பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும், நிவாரணங்களை நிறுத்தியமைக்கு எதிராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக தொடர் பழிவாங்களுக்கு எதிராக, குறிப்பாக ராணுவத்தினரை தண்டிப்பதற்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர். ராணுவத்தை தண்டிப்பதும் பழிவாங்கல் நடவடிக்கையே.

இவ்வாறு அரசியல், பொருளாதார ரீதியில் தற்போதைய ஆட்சியாளர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

பலத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றியெற முடியுமென ஆட்சியாளர்கள் நினைத்தனர். ஆனால், அவர்களே அவர்களுக்கு சேறு பூசிக்கொண்ட நிலையே இறுதியில் ஏற்பட்டது.

தேர்தலுக்கான அவசரம் எமக்கு இல்லை. அரசாங்கத்தை மாற்ற வேண்டிய தேவை மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் பிரகாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்ல வேண்டும்” என்றார்.

watermark (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)