Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொள்கையை ஏற்றால் கூட்டமைப்புடன் இணைவோம்: கஜேந்திரகுமார்

In இலங்கை
Published: 05:49 GMT, Feb 12, 2018 |
0 Comments
1235
This post was written by : Risha

தமிழ் தேசிய பேரவையின் கொள்கையை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக ஏற்று நேர்மையான அரசியலை நடத்த கூட்டமைப்பு இணங்குமாயின், அவர்களுடன் இணைந்து பயணிக்க தயார் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கூட்டமைப்பினுடைய தலைமைத்துவம் இனத்தினுடைய நலன்களுக்கு விரோதமாக செயற்படுகின்றனர் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான செயற்பாட்டிற்கே நாம் இணங்கியிருந்தோம். மாறாக நாம், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ, தமிழரசு கட்சிக்கோ அல்லது அவர்களது பங்காளிக் கட்சிகளுக்கோ எதிரானவர்கள் அல்லர்.

தமிழினத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த கூட்டமைப்பின் தலைமைத்துவம் நீக்கப்பட்டு, புதிய நேர்மையான, தூய்மையான அரசியலை நடத்த தயாராகவிருக்கும் ஒரு தலைமைத்துவம் உருவாக்கப்படும் பட்சத்தில் கூட்டமைப்புடன் இணைவதற்கு தயார்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)