Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீழ்த்தப்பட்டது லெனின் சிலை: வெடித்தது போராட்டம்

In இந்தியா
Updated: 03:52 GMT, Mar 7, 2018 | Published: 03:52 GMT, Mar 7, 2018 |
0 Comments
1266
This post was written by : Kemasiya

 

திரிபுராவில் பெலோனியா என்னும் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்குனர் லெனினின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பிரதமருக்கு எதிராக ஆர்பாட்டம் வெடித்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து மேற்கு வங்களாவில் இன்று இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், பா.ஜ.க.ஆட்சியினர் மற்றும் பிரதமர் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தும் இவ் ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மூன்று மாநிலங்களவைத் தேர்தலில் திரிபுராவில் 25ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கம்மியூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது.

இதனால் பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியனருக்கிடையில் எற்பட்ட முறுகள் நிலமை காரணமாக கலவரம் வெடித்தது. இக் கலவரத்தில் 11பேர் உயிரிழந்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து லெனின் சிலை உடைக்கப்பட்டது. இச்சம்பவம் கமியூனிஸ்ட் கட்சியினரிடம் பெரும் கோபத்தை உண்டு பண்ணியதால், மீண்டும் நேற்று கலவரம் மற்றும் ஆர்பாட்டம் என்பன உருவெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் திரிபுரா எங்கும் 144 தடையத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்துள்ளதோடு பதற்றமான நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg