Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திமோர் – அவுஸ்ரேலியாவுக்கு இடையில் முக்கிய உடன்படிக்கை கைச்சாத்து

In உலகம்
Updated: 04:29 GMT, Mar 7, 2018 | Published: 04:29 GMT, Mar 7, 2018 |
0 Comments
1153
This post was written by : Elakkiya

ஐ.நா. உடன்படிக்கையில் கிழக்கு திமோர் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையில் நீண்டகாலமாக நீடிக்கும் மோதலை தீர்த்து வைத்தல் மற்றும் எரிவாயு துறையில் வருமானத்தை பகிர்ந்து கொள்ளும் முறை தொடர்பான உடன்படிக்கையிலேயே மேற்படி இருநாடுகளும் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைச்சாத்திட்டுள்ளன.

அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் மற்றும் கிழக்கு திமோர் துணைப் பிரதமர் ஏஜியோ பெரெய்ரா ஆகியோருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப், கிழக்கு திமோரின் பொருளாதார மற்றும் மனித அபிவிருத்திக்கான தமது ஆதரவு தொடரும் என்றும் வளமான பகிர்வு வளத்தை உருவாக்குவதற்கான வழியை மேற்படி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த உடன்படிக்கை அவுஸ்ரேலியா- திமோர் உறவில் புதிய அத்தியாயத்தை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த திமோர் துணைப் பிரதமர், திமோர்- அவுஸ்ரேலிய கடல் எல்லைகளுக்கு ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உறுதியான ஈடுபாட்டுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உடன்படிக்கையின் பிரகாரம், அபிவிருத்தியை கருத்தில் கொண்டு வருமானத்தில் அவுஸ்ரேலியாவை விடவும் அதிக பங்கை கிழக்கு திமோரே பெற்றுக் கொள்ளும். இது 70 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
மேற்படி உடன்படிக்கை திமோர் கடற்படரப்பில் முதன்முறையாக ஒரு எல்லையை அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg