Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவீடன் மக்கள் என்னை நேசிக்கின்றனர்: ட்ரம்ப்

In
Updated: 05:19 GMT, Mar 7, 2018 | Published: 05:19 GMT, Mar 7, 2018 |
0 Comments
1178
This post was written by : Elakkiya

சுவீடன் மக்கள் தன்னை மிகவும் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வென் ஆகியோருக்கு இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் வேறுபாடுகளை குறிப்பிட்ட ட்ரம்ப், சுவீடன் தீவிர முதலீட்டாளராக இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” ஸ்வீடனுடனான எமது உறவு மேலும் வலுவடையப் போகின்றது. இராணுவத் தரப்பு, வர்த்தகம், பொருளாதார ரீதியில் எமது உறவு வலுவடையப் போகின்றது. அமெரிக்காவின் எட்டாவது மிகப்பெரிய முதலீட்டாளராக சுவீடன் உள்ளது. தேர்தல்கள் தினம் முதல்கொண்டு சந்தை கிட்டத்தட்ட 40 சதவீதமாக இருப்பதால் சுவீடன் மக்கள் என்னை மிகவும் நேசிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg