Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் ஹோட்டலில் ஸ்பெய்ன் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

In
Updated: 06:23 GMT, Mar 7, 2018 | Published: 06:23 GMT, Mar 7, 2018 |
0 Comments
1174
This post was written by : Elakkiya

லண்டன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஸ்பெய்ன் சுற்றுலாப் பயணி ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையிலான கார்பன் மொனொக்சைட் கசிவு காரணமாக உயிரிழந்துள்ளதாக லண்டன் மற்றும் ஸ்பெய்ன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலேயே கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

சம்பவத்தில் 34 வயதுடைய மார்கோஸ் சர்வேரா மெனென்டெஸ் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் 37 வயதுடைய எஸ்டேபன் கார்சியா என்பவர் சுயநினைவிழந்த நிலையில் இருப்பதாகவும் ஸ்பெய்ன் மற்றும் சில பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அதிகளவான கார்பன் மொனொக்சைட் வெளியேற்றமே காரணம் என்று தெரியவருகின்றது.

விசாரணைகளுக்காக ஹோட்டல் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg