Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைதியை சீர்குலைக்க முஸ்லிம்கள் நினைக்கவில்லை: கபீர் ஹாசிம்

In இலங்கை
Updated: 07:15 GMT, Mar 7, 2018 | Published: 07:15 GMT, Mar 7, 2018 |
0 Comments
1251
This post was written by : Varshini

நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தச் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டதில்லையென அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஜெனீவா செல்ல மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற பிரச்சினை நன்கு திட்டமிட்ட செயற்பாடு என்றும், குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மாத்திரம் அதில் ஆர்வமாக உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலையை தோற்றுவித்துள்ள நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை சந்திப்பில் பல அமைச்சர்கள் கலந்துகொண்டு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg