Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுபான்மை மக்களின் ஆதரவை முறியடிக்க சதி: ராஜித

In இலங்கை
Updated: 07:39 GMT, Mar 7, 2018 | Published: 07:39 GMT, Mar 7, 2018 |
0 Comments
1229
This post was written by : Varshini

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கே கிடைத்ததென குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதனை முறியடிப்பதற்காவே சிலர் வன்முறைச் சம்பவங்களை தூண்டிவிட்டுள்ளனரென குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கண்டி வன்முறைச் சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மாத்திரமன்றி, அவற்றை தூண்டிவிட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், மறு அறிவித்தல் வரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg