Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் பகுதியில் நீடிக்கும் கடையடைப்பு போராட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

In இந்தியா
Updated: 09:24 GMT, Mar 7, 2018 | Published: 09:24 GMT, Mar 7, 2018 |
0 Comments
1165
This post was written by : Kemasiya

காஷ்மீர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) குறித்த கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில், வீதிகளில் ஓரிரு வாகனங்கள் மட்டுமே செல்வதாகவும், பொதுமக்களின் நடமாட்டம் முற்றாக இல்லாதிருப்பதாகவும் ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் தெரியவந்துள்ளது.

ஐம்மு-காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் குறித்த நிலைமை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீநகர் பகுதியில் இளைஞர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டமை மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலினால் தொடர்ந்தும் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றமை ஆகியவற்றை கண்டித்து, கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg