Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

BNP Paribas பகிரங்க டென்னிஸ் – ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

In விளையாட்டு
Updated: 03:43 GMT, Mar 12, 2018 | Published: 03:43 GMT, Mar 12, 2018 |
0 Comments
1168
This post was written by : Velauthapillai Kapilan

அமெரிக்காவில் நடைபெற்று வரும் BNP Paribas பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் பிரபல செர்பிய வீரர் ஜோகோவிச், அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்தியன் வெல்ஸ் என அறியப்படும் பி.என்.பி பரிபாஸ் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் (BNP Paribas ) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியொன்றில் செர்பியாவின் முன்னணி வீரர் நொவாக் ஜோகோவிச் (NOVAK DJOKOVIC) ஜப்பானிய வீரர் டரோ டேனியலை TARO DANIEL எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஜோகேவிச்சிற்கு அதிர்ச்சி கொடுத்த டேனியல், அவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த போட்டியில், 7-6, 4-6, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற TARO DANIEL மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் மற்றுமொரு போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், ஆர்ஜன்டீன வீரர் ஃபெடெரிகோ டெல்போனிஸை (Federico Delbonis) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், 6-3, 7-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெடரர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல் மற்றுமொரு போட்டியில் பிரான்ஸ் வீரர் கெய்ல் மொன்பீல்ஸ் (Gael Monfils), அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னரை (John Isner)  எதிர்கொண்டார்.

இறுதிவரையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டிருந்த அவர் 6-7, 7-6, 7-5 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg