Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி கலவரம் தொடர்பில் நவநீதம்பிள்ளை எச்சரிக்கை

In இலங்கை
Updated: 08:38 GMT, Mar 12, 2018 | Published: 08:38 GMT, Mar 12, 2018 |
0 Comments
1342
This post was written by : Yuganthini

இலங்கையில் இடம்பெற்ற கண்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படாவிடின் ஏனையோரும் சட்டத்தை கையில் எடுப்பதற்கு தயங்கமாட்டார்களென, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி கலவரத்தினை சாதாரண மதக்கலவரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது கிளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களைக் கொண்ட ஒரு சமூகத்தின் செயற்பாடு போன்றே காணப்படுகின்றதென நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தச் சம்பவம் இலங்கை அரசின் மீதான நம்பிக்கையை வெகுவாக குறைவடைய செய்துள்ளதுடன், ஐக்கிய நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாதவிடத்து, இலங்கை அரசின் மீது  ஒருபோதும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியாதெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg