சிட்னியில் காட்டுத்தீ: அவசர எச்சரிக்கை பிறப்பிப்பு
அவுஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அவசர எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவித்துள்ளனர்.
மேற்படி பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரையில் ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக, தீயணைப்புப் படைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுக்கடங்காமல் மிக வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் நடவடிக்கையில், தீயணைப்புப் படைவீரர்கள் சுமார் 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், இந்தக் காட்டுத்தீயின்போது எந்தவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடுமையான வெப்பநிலையே காட்டுத்தீ பரவுவதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படும்போதும், இது தொடர்பான விசாரணையைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.