Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைச்சாலைகளுக்குள் பலவந்தமாக நுழையும் நிலை ஏற்படும்! – அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

In இலங்கை
Updated: 10:36 GMT, Apr 15, 2018 | Published: 10:36 GMT, Apr 15, 2018 |
0 Comments
2102
This post was written by : Varshini

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் சித்த சுயாதீனம் அற்றவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர்களை விடுவிக்காவிட்டால் சிறைச்சாலைக்குள் பலவந்தமாக நுழையும் நிலை ஏற்படுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் பெருவாரியான உறவினர்களை இணைத்துக்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் எச்சரித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்ற நிலையில், அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்றமைக்கு கண்டனமும் வெளியிட்டார்.

குறிப்பாக, பிரதமர் ரணிலுக்கு எதிராக அண்மையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, கூட்டமைப்பினர் எதிராக வாக்களித்தனர். ரணிலை காப்பாற்றும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டியதாகவும், இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அந்த நாடுகளிடம் எழுத்து மூலமான உத்தரவாதமொன்றை பெற்றிருக்க வேண்டுமெனவும் கஜேந்திரன் குறிப்பிட்டார்.

அதனை விடுத்து பிரதமர் ரணிலிடம் உத்தரவாதம் பெறுவதில் எவ்வித நன்மையும் கிட்டப்போவதில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)