Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலமான தமிழ் கட்சி உருவாகுவதை ஐ.தே.க. விரும்பவில்லை! – மனோ கணேசன்

In இலங்கை
Updated: 11:26 GMT, Apr 15, 2018 | Published: 11:26 GMT, Apr 15, 2018 |
0 Comments
1221
This post was written by : Varshini

நாட்டில் பலமான தமிழ் கட்சியொன்று உருவாகுவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பில்லை என்றும், அவ்வாறு உருவாகினாலும் அக்கட்சி தமக்கு சார்பாக இருக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றது என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மையை கூறுவதற்கு தான் அஞ்சவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை தனது அமைச்சின் கீழ் கொண்டுவருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும், அதன்போது தலையிட்ட அமைச்சர் மங்கள அந்த அமைச்சை ஜனாதிபதி வைத்திருப்பதே சிறந்ததென கூறியதாகவும் மனோ குறிப்பிட்டார். சர்வதேசத்தின் கவனத்தை குறித்த அமைச்சு கொண்டிருப்பதால் ஜனாதிபதியிடம் இருப்பதே சிறந்ததென மங்கள கூறியதாக மனோ குறிப்பிட்டார்.

எனினும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பது முக்கியமல்ல என்றும், சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே முக்கியம் என்றும் தாம் குறிப்பிட்டதாக மனோ மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)