Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா நகரசபையில் ஆட்சியமைத்தது உதயசூரியன்!

In இலங்கை
Updated: 05:25 GMT, Apr 16, 2018 | Published: 05:25 GMT, Apr 16, 2018 |
0 Comments
1398
This post was written by : Varshini

வவுனியா நகரசபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தவிசாளராக இ.கௌதமன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுந்தரம் குமாரசுவாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரசபையின் தவிசாளரை தெரிவுசெய்வதற்கான முதலாவது அமர்வு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனது பலத்தை நிரூபித்துள்ளது.

தவிசாளருக்கான போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நா.சேனாதிராஜாவும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் நிறுத்தப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட நா.சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்தனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட கௌதமனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொதுஜன பெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அதன் பிரகாரம் தலைவராக கௌதமன் தெரிவு செய்யப்பட்டார்.

உபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் க.சந்திரகுலசிங்கமும் சுதந்திரக் கட்சியின் சார்பில் சு.குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர்.

இவர்களில் க.சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அனைத்து தெரிவுகளிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை வகித்துள்ளது.

நகரசபையின் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட இ.கௌதமன் முன்னாள் நகரசபை தலைவரான வேலுச்சேமன் எனப்படும் ச.சுப்ரமணியத்தின் பெறாமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிவமோகன், சிவக்தி ஆனந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், தர்மபாலா, சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியானது கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமக்கு ஆதரவான கட்சிகளை இணைத்துக்கொண்டு, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பேரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இப்புதிய கூட்டமைப்பானது அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல பிரதேசங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)