Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகாவில் ஆட்சி மாறினாலும் காவிரி நீர் வேண்டும்: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 09:26 GMT, May 14, 2018 | Published: 09:26 GMT, May 14, 2018 |
0 Comments
1070
This post was written by : Kemasiya

கர்நாடகாவை ராமன் ஆட்சி செய்தால் என்ன ராவணன் ஆட்சி செய்தால் என்ன தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க வேண்டுமென  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் காவிரி விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியதற்கு  மேற்படி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை 15 ஆம் திகதி இதற்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் எந்தக்கட்சியின் ஆட்சிக்கு வந்தாலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் காவிரியை தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்று, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)