Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீனத்தில் மூன்று நாட்களுக்குத் துக்கதினம்: ஜனாதிபதி அறிவிப்பு

In உலகம்
Updated: 03:15 GMT, May 15, 2018 | Published: 03:15 GMT, May 15, 2018 |
0 Comments
1070
This post was written by : Johnson paiva

ஜெருசலேமில் கொல்லப்பட்ட பலஸ்தீனியர்களுக்காக இன்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் எனவும் மூன்று நாட்களுக்குத் துக்கத்தினம் அனுஸ்டிக்கப்படும் எனவும் பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜெருசலேமினை இஸ்ரேயலின் தலைநகராக அறிவித்து அங்கு இஸ்ரேயலுக்கான அமெரிக்காத் தூதரகத்தினை நேற்று திறந்துவைத்து. இந்நிலையில் கிழக்கு ஜெருசலேமினைத் தமது தலைநகராகக் கொண்டிருந்த பலஸ்தீன மக்கள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை) போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போராட்டத்தினை அடக்க முற்பட்ட இஸ்ரேயல் படையினர் பலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 2400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தலைமைத்துவ ஒன்றுகூடலில் பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸ் பேசுகையில், காசாவில் இடம்பற்ற இந்தச்சம்பவம் “படுகொலை” எனவும் இதற்கு எதிரிப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பொது வேலை நிறுத்தம் மற்றும் மூன்று நாட்களுக்குத் துக்கத்தினம் நாடுபூராக அனுஸ்டிக்கப்படவேண்டும் என்றார்.

மேலும் இந்தநடவடிக்கையின் மூலம் அமெரிக்கா பலஸ்தீன மக்களின் கோபத்தினைத் தூண்டியுள்ளதோடு சர்வதேச நாடுகளுக்கான சமாதானத்தின் ஒரு பின்னடைவினைச் சம்பாதித்துள்ளது என்றார்.

இந்நிலையில் 2014 ற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான சம்பவம் இந்தப் படுகொலை எனவும்   இதில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 2400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது ஒரு இரத்த நாள் எனப் பலஸ்தீனா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)