Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைதீவு மக்களுக்கு வெற்றி – மீள்குடியேற்றத்திற்கு அனுமதி! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 08:03 GMT, May 15, 2018 | Published: 08:03 GMT, May 15, 2018 |
0 Comments
1482
This post was written by : Varshini

கிளிநொச்சி – இரணைதீவில் நிரந்தரமாக தங்கியிருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி நிரந்தரமாக குடியிருப்பதற்கும் தமது வாழ்வதார தொழிலான மீன்பிடியை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 6 தொடக்கம் 7 ஏக்கர் அரச காணியில் கடற்படை தங்கியிருக்கவும், ஏனைய காணிகளில் மக்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் மீள்குடியேற்ற அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, இரணைதீவு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், படிப்படியாக சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் தொடர் அழுத்தம்! – இரணைதீவில் கொழும்பு உயர்மட்டக் குழு

கிளிநொச்சி – இரணைதீவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கொழும்பிலிருந்து சென்ற உயர்மட்டக் குழுவினர் சந்தித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை குறித்த குழுவினர் தற்போது சந்தித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் எஸ்.எஸ்.ரணசிங்க, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் பிரேமச்சந்திரன், கொமாண்டர் டி.எஸ்.ஏ.பி.சமரசிங்க, லெப்டிணன்ட் கொமாண்டர் எம்.கே.எம்.பெர்னாண்டோ ஆகியோர் விசேட விமானம் மூலமாக இரணைதீவு சென்றுள்ளனர்.

இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், புநகரி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சென்றுனர்.

இரண்டு தசாப்த காலமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இரணைதீவை விடுவிக்குமாறு கோரி, அம்மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வருவதோடு, கடந்த ஒருமாத காலமாக இரணைதீவிற்குள் சென்று போராடி வருகின்றனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கும் நோக்கில் இன்றைய சந்திப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)