Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சி கவிழ்ப்புக்கு திட்டமிடும் கோட்டாவிற்கு விசாரணைப் பயம்! – அசாத் சாலி

In இலங்கை
Updated: 11:31 GMT, May 15, 2018 | Published: 11:31 GMT, May 15, 2018 |
0 Comments
1130
This post was written by : Varshini

நாட்டின் ஆட்சியை கவிழ்த்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிடுகின்றார். ஆனால், விசாரணைக்காக அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடிச் செல்லும் போது மாத்திரம் அமெரிக்க பிரஜையென கூறி தப்பிச் செல்வதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகளில் மாத்திரமன்றி சிறையிலுள்ளவர்களையும் சுட்டுக்கொன்றார்கள். இவற்றை செயற்படுத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டபோதும், அதற்கான உத்தரவை வழங்கியவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதாக அசாத் சாலி குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் பல கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளதால் தனித்து தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையுள்ளதென்றும், இவ்வாறு காணப்படுகையில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதிலும் சிறப்பு நீதிபதிகளை நியமிப்பதிலும் எவ்வித பயனும் இல்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)