Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்- கிம் உச்சிமாநாட்டிற்கு தொடர்ந்து தயாராகும் அமெரிக்கா!

In
Updated: 03:44 GMT, May 16, 2018 | Published: 03:44 GMT, May 16, 2018 |
0 Comments
1068
This post was written by : Risha

வடகொரியாவின் எச்சரிக்கைக்கு மத்தியில், டொனால்ட் ட்ரம்பிற்கும், கிம் ஜொங்-உன்னிற்கும் இடையிலான உச்சிமாநாட்டிற்கு தொடர்ந்தும் தயாராகி வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ பயிற்சியை அடுத்து வடகொரியா, அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து சந்தேகம் வெளியிட்டது. இதேவேளை, தென்கொரியாவுடன் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையையும் ரத்து செய்தது.

வடகொரியாவின் இந்த அறிவிப்பையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமெரிக்க அரசதுறை பேச்சாளர் ஹீத்தர் நாவேர்ட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுவரை எதனையும் உறுதிபடுத்த முடியாது எனத் தெரிவித்த ஹீத்தர், எவ்வாறாயினும் எதிர்வரும் ஜுன் மாதம் 12ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ட்ரம்ப்- கிம் உச்சி மாநாட்டிற்காக அமெரிக்கா தொடர்ந்து தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைகள் காரணமாக வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அவதூறுகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து வந்தன. இவ்வாறான நிலையில், இவ்விரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சாத்தியமற்றது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கிம்-ஐ சந்திப்பிதற்கான அழைப்பை கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை எதிர்வரும் ஜுன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)