Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி-மார்க்கல் ஜோடிக்கு மாபெரும் வாழ்த்து அட்டை!

In
Updated: 06:27 GMT, May 16, 2018 | Published: 06:27 GMT, May 16, 2018 |
0 Comments
1059
This post was written by : Risha

திருமண பந்தத்தில் இணையப்போகும் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மாபெரும் வாழ்த்து அட்டையொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸின் பிரதான கிழக்கு- மேற்கு வீதியான ஹொலிவுட் பவுல்வர்ட் வீதியில் இவ்வாழ்த்து அட்டை காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் நலன்விரும்பிகள் தங்கள் பொன்னான வாழ்த்துக்களை எழுத்துக்களினால் பதிந்து வருகின்றனர்.

‘ஹரி-மார்க்கல் என்றென்றும் மகிழ்வுடன் வாழ்க’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு, ஜோடியின் புகைப்படத்தை தாங்கியதாக இந்த வாழ்த்து அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவுல்வர்ட் வீதியிலுள்ள சீன திரையரங்கின் வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மாபெரும் வாழ்த்து அட்டையில், லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள பிரித்தானிய தூதுவர் ஜெனரல் மைக்கல் ஹவல்ஸ் முதலாவது வாழ்த்தை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து நலன்விரும்பிகள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஹரி-மார்க்கல் ஜோடி எதிர்வரும் 19ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து இவ்வாழ்த்து அட்டை புதுத் தம்பதியருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)