Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 11:36 GMT, May 16, 2018 | Published: 11:36 GMT, May 16, 2018 |
0 Comments
1064
This post was written by : poovannan

அரச நியமனத்தை வலியுறுத்தி யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டமொன்றை இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் முன்னெடுத்துள்ளனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தை வட. மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக ஒன்றுகூடிய இவ்வேலையற்ற பட்டதாரிகள், “கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர் வீச்சு எதற்கு?”, “அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலைக்கு முதுமானிப் பட்டம் எதற்கு?”, “உரிமையைக் கேட்டால் தண்ணீர் தாக்குதலா?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைக் கொண்டு கோஷமிட்டனர்.

சமீபகாலமாக வேலையில்லாப்பட்டதாரிகளின் போராட்டமானது வவுனியா, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)