D40 பர்ஸ்ட் லுக் எப்போது?
In சினிமா February 1, 2020 9:41 am GMT 0 Comments 1710 by : Amilkanth Ayyathurai

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு D40 என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. Ynot Studios சார்பில் சசிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனிலும் பிறகு மதுரையிலும் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் Ynot Studios நிறுவனத்தின் 10-வது வருட நிறைவையொட்டி, அவர்கள் வெளியிட்ட போஸ்டர் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது. கையில் அருவாளுடன் தனுஷ் நிற்பது போல அது வடிமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் போஸ்டர் எப்போது வரும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார், ‘வரும் 6-ஆம் திகதியிலிருந்து படப்பிடிப்பு பணிகள் தொடங்குவதால், அதற்கான வேலைகளில் இருக்கிறோம். அதனால் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 9-ஆம் திகதியன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் திகதியை அறிவிப்போம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.