சவுதிப்பயணம் ரத்து! – நெதர்லாந்து நிதியமைச்சர்
In உலகம் October 18, 2018 11:39 am GMT 0 Comments 1605 by : Farwin Hanaa

சவுதி அரேபியாவின் தலைநகர் றியாதில் இடம்பெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லையன நெதர்லாந்து நிதியமைச்சர் வோப்கே ஹொயெக்ஸ்ரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25 ஆம் திகதி சவுதியின் றியாத் நகரில் இடம்பெறவிருக்கும் எதிர்கால முதலீட்டு தொடக்க மாநாட்டில் நெதர்லாந்து நிதியமைச்சர் வோப்கே ஹொயெக்ஸ்ரா கலந்துகொள்ளப்போவதில்லையென அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு இன்று (வியாழக்கிழமை) கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் காணாமற்போன விவகாரம் தொடர்பில் உலக நாடுகள் சவுதி அரேபியாவைக் குற்றவாளியாக பார்க்கும் வேளையில், நெதர்லாந்த நிதியமைச்சர் இவ்வாறு தீர்மானித்து தனது சவுதிப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மேலும், சவுதி அரேபியாவுடனான வர்த்தக நடவடிக்கைகள் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் ஏற்கனவே இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் கடந்த இரண்டாம் திகதியிலிருந்து காணாமற்போன சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாகவும் அதனை மேற்கொண்டது சவுதி என்றும் அதற்கான ஆதரங்கள் உள்ளதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.