அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றது – மஹிந்த அணி குற்றச்சாட்டு!

அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றது என மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் அரசாங்கம் நஷ்டஈடு வழங்காமல் இருக்கின்றது.
தனது நாட்டுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நாடு உலகில் எங்கும் இல்லை.
ஆனால் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு நாட்டை பிளவுபடுத்த ஆயுதமேந்திப்போராடிய குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானமானது பயங்கரவாதத்துக்கு துணைபோகும் செயலாகும்.
இதன் மூலம் அரசியல் தலைவர்களை கொலைசெய்த மற்றும் அரச நிறுவனங்கள், விகாரைகளுக்கு குண்டுவைத்த புலி உறுப்பினர்கள் இன்று மரணித்திருந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.