Huawei நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி வீதம் அதிகரிப்பு!

2018ஆம் ஆண்டில் Huawei இன் விற்பனை வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21வீதம் வளர்ச்சி கண்டு 108.5 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எட்டவுள்ளது.
Huawei நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்தொலைபேசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. சர்வதேச வலையமைப்பு நிறுவனங்களுடன் 5G இற்கான 26 வர்த்தக உடன்படிக்கைகளில் Huawei கைச்சாத்திட்டுள்ளது. உலகளாவில் 10,000 இற்கும் மேற்பட்ட 5G தள மையங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும், 160 இற்கும் மேற்பட்ட சர்வதேச நகரங்களில் டிஜிட்டல் மாற்றத்திற்கான பங்காளராக Huawei தெரிவு செய்யப்பட்டுள்ளது. Fortune Global 500 பட்டியலிலுள்ள 211 நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றத்திற்கு Huawei இனைத் தெரிவு செய்துள்ளன.
இதேவேளை, தனிப்பட்ட பாவனைக் கணினி (PC) வர்த்தகம் மற்றும் smart homes இற்கான IoT ecosystem ஆகியவற்றைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நிகழ்த்தியுள்ளது.
Huawei Cloud ஆனது 18 பிரிவுகளில் 140 இற்கும் மேற்பட்ட cloud சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன், 22 பிராந்தியங்களின் மத்தியில் கிடைக்கப்பெறுகின்ற 37 வலயங்களில் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக Huawei பங்காளர்களுடன் இணைந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த ஆண்டில் Huawei இன் செயற்கை நுண்ணறிவு மூலோபாயம் (AI strategy) தொடர்பிலும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அனைத்து கட்டமைப்புக்களுக்கும் AI திர்வுகளின் முழுமையான ஏற்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
2019ஆம் ஆண்டில் மூலோபாய வர்த்தகங்கள் மற்றும் மூலோபாய வாய்ப்புக்கள் மீது Huawei கவனம் செலுத்தவுள்ளதுடன், இன்னும் அதிக அளவில் மீள்எழுச்சி ஆற்றல் கொண்ட வர்த்தகக் கட்டமைப்பை கட்டியெழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக போட்டித்திறனை அவ்வளவாகக் கொண்டிராத உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதை குறைத்துள்ளது.
மிகவும் எளிமையான வலையமைப்பு கட்டமைப்பினை அபிவிருத்தி செய்து, இணையப் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பேணல் பாதுகாப்பினை அதியுயர் மட்டத்தில் பேணுவதை உறுதி செய்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.