நோட்ரே டாம் பாரிய தீ விபத்து: மீண்டும் பெரும் பலத்துடன் கட்டியெழுப்புவோம் – பராக் ஒபாமா
In ஐரோப்பா April 16, 2019 5:23 am GMT 0 Comments 1984 by : Jeyachandran Vithushan

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தையடுத்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேவாலயம் சென்று பிரார்த்னையில் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “நோட்ரே டாம்” தேவாலயம் உலகத்தின் பெரும் சொத்துக்களில் ஒன்று. பிரெஞ்சு மக்கள் துயரத்தில் இருக்கும் வேளையில் நான் உங்களை நினைத்துக் கொள்கின்றேன்.
துயரத்தில் பங்குகொள்கின்றேன். வரலாற்றைத் தொலைக்கும்போது நாம் துயரம்கொள்வது மனித இயல்பு. ஆனால் அதே இயல்புடன், மிகவும் பலத்துடன் ஒன்றிணந்து மீண்டும் கட்டி எழுப்புவோம்” என பதிவிட்டுள்ளார்.
850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று குறித்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 500 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் 17 தீயணைப்பு வகங்களுடன் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.