நிதி குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் போராட்டம்!
In கனடா May 8, 2019 9:10 am GMT 0 Comments 2624 by : Jeyachandran Vithushan

ஒன்ராறியோவை மாகாண அரசாங்க மேற்கொண்ட நிதி குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) குயின்ஸ் பூங்காவில் ஒன்றுகூடி குறித்த போராட்டத்தினை மேற்கொண்டனர்.
மாகாணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சட்ட உதவிக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
மேலும் குறைந்த வருவாய் பெற்றுக்கொள்வதானது தமக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய போராட்டக்காரர்கள், இதற்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கு சட்டபூர்வமான நடவடிக்கைக்கு தாம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2019-2020 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சட்ட உதவிகளுக்கான தொகையில் 30 விகிதம் அல்லது 133 மில்லியன் டொலர்களை குறைக்க திட்டம் கொண்டுவரப்பட்டது.
அத்தோடு அகதிகள் மற்றும் குடிவரவு சட்ட சேவைகளுக்காக மாகாண நிதிகளை இனிமேல் பயன்படுத்த முடியாது என்றும் அந்த நிறுவனங்களுக்கு ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.