MCC கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டாலும் உதவிகள் தொடரும் – அமெரிக்கா
In ஆசிரியர் தெரிவு December 17, 2020 6:44 am GMT 0 Comments 1439 by : Dhackshala

இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்துவது என எம்.சி.சியின் பணிப்பாளர் குழு தீர்மானித்துள்ள போதிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
MCC ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அதன்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் பயன்பெரும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடாக தொடர்ந்தும் காணப்படும் என தெரிவித்துள்ள தூதரகம், இலங்கை கொரோனாவை எதிர்கொள்வதற்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.