#me too தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராதாகிருஸ்ணன்
#me too எனப்படுவது யார் மீது வேண்டுமானாலும் பழி சுமத்த பயன்படுத்தப்படும் ஒன்றாகிவிட்டது எனத் தெரிவித்த, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன், ஒருவர் மீது தகுந்த ஆதரங்களுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பிரபலங்கள், தமக்கு நேர்ந்த பாலியன் சீண்டல்கள் தொடர்பில், #me too குறியீட்டின் மூலம் சமூகவலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதில், சினிமாத்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் மீதும் தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையால், இந்திய அளவில் இந்தப் சர்ச்சை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பில் செய்தியாளர்களிடத்தில் கருத்து வெளியிடும்போதே பொன். ராதாகிருஸ்ணன் மேற்படி கூறியுள்ளார்.
இதேவேளை, #me too எனப்படுவது பழிவாங்கலை மேற்கொள்ள முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக கூட இருலுக்கலாம் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதன்முதலில் இந்த குறியீட்டு பாவனை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது உலகளவில் விரிந்து செல்கிறது.
அந்தவகையில், இந்தியாவில் பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களையும் முன்வைத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.