‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
In சினிமா May 5, 2019 4:02 am GMT 0 Comments 2323 by : adminsrilanka
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகியுள்ளது.
காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் சிங்கிள் ட்ராக் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் இம்மாதம் 17ஆம் திகதி வெளியாகுமென இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
ஹிப் ஹொப் ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆ.ர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.