My Dad My Superstar தொடரில் வட மாகாண அணியினையும் இணைத்துக்கொள்ள தீர்மானம்!

My Dad My Superstar கிரிக்கெட் தொடரில் இம்முறை வட மாகாண அணி ஒன்றையும் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வீரர்களின் பங்களிப்புடன் My Dad My Superstar கிரிக்கெட் தொடர் கடந்த வருடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.