‘NGK’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஒளிப்படங்கள்
In சினிமா April 30, 2019 8:55 am GMT 0 Comments 2081 by : adminsrilanka

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் நேற்று (திங்கட்கிழமை) வெயளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், ட்ரெய்லர் வந்த சில மணி நேரங்களிலேயே 3.6 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதேநேரம் டுவிட்டர் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.
அரசியல் அக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் இத்திரைப்படம் அடுத்த மாதம் 31ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதில் சூர்யா, ராகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, சரத்குமார், பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.