கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை – பிரித்தி படேல்
In இங்கிலாந்து January 26, 2020 9:33 am GMT 0 Comments 1920 by : Jeyachandran Vithushan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எவரும் பாதிக்கப்படவில்லை என உள்துறை செயலாளர் பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்கை நியூஸ்க்கு வழங்கிய விசேட செவ்வியில் பேசிய அவர், சீனாவில் சிக்கித் தவிக்கும் பிரித்தானிய மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் பகுதிகளிலிருந்து பிரித்தானிய மக்களை திருப்பி அனுப்ப அரசாங்கம் எயர் லிஃப்ட் திட்டமிடுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஊடகங்களின் செய்தி குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்த வைரஸ் சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன் இதனால் அந்நாடுகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தவைரஸ் குறித்து முன்னதாகவே முன்னெச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் வைத்திய ஆய்வு நிறுவனமானது, இவ் வைரஸ் காரணமாக 18 மாதங்களில் 65 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.