NTFF விருது வென்ற ‘தமிழ்ச்செல்வி’ குறும்படம் வெளியீடு
In கலைஞர்கள் September 20, 2020 8:36 am GMT 0 Comments 17764 by : Varothayan
“கர்ணன் கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இயக்கத்தில் உருவான “தமிழ்ச்செல்வி” குறும்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியது.
சபேசன் சண்முகநாதன், மகேஸ்வரி ரட்ணம், நிவி, லாரா பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்த இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவு நிஷாந்தன் ராஜகுலசிங்கம், படத்தொகுப்பு ஆர்.டி.ராஜ், இசை அருண் போல், கலை இயக்கம் இளங்கோ ஜி.
இக்குறும்படத்தை கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கின்றார் சபேசன் சண்முகநாதன். திரைக்கதை, இயக்கம் கனகநாயகம் வரோதயன்.
“தமிழ்ச்செல்வி” குறும்படம் கடந்த வருடம் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த சபேசன் சண்முகநாதனுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.