
மருதப்பா கந்தசாமி
25.04.1935 - 17.01.2019
Birth Place : யாழ்ப்பாணம், கரவெட்டி
Lived : யாழ்ப்பாணம், சுண்டுக்குழி
யாழ்ப்பாணம்- கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பா கந்தசாமி கடந்த வியாழக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா சின்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கபிரியேல் அன்னம்மா தம்பதிகளின் மருமகனும், றீற்றாவின் கணவரும், யசித்தா (பிரித்தானியா), ரவீந்திரா, யமுனா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் தந்தையும், அன்ரன் டீ மடொன்சா, சித்திரா (கனடா), டயன் ஆகியோரின் மாமனாரும், கீர்த்தனன், யெயந்தன், சரணியா, கவின், றெக்சானா, றீகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.