UPDATE – விமான விபத்தில் தலைமை இராணுவ அதிகாரி உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழப்பு!

தாய்வானில் இடம்பெற்ற விமான விபத்தில் தலைமை இராணுவ அதிகாரி உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகொப்டர் ஒன்றினை மலைப்பகுதியில் அவசரமாக தரையிரக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் தாய்வானின் தலைமை இராணுவ அதிகாரி உள்ளிட்ட 13 பேர் ஆரம்பத்தில் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதனைத் தொடர்ந்து 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் குறித்த விபத்தில் தாய்வானின் தலைமை இராணுவ அதிகாரி Shen Yi-ming உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்து விமானப்படையின் தலைவர் கொமாண்டர் Hsiung Hou-chi இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
தாய்வானில் இடம்பெற்ற விமான விபத்தில் மாயமான 13 பேரில் 10 பேர் மீட்பு!
தாய்வானில் இடம்பெற்ற விமான விபத்தில் மாயமான 13 பேரில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகொப்டர் ஒன்றினை அவசரமாக தரையிரக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் தாய்வானின் தலைமை இராணுவ அதிகாரி உள்ளிட்ட 13 பேரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் தாய்வானின் தலைமை இராணுவ அதிகாரி Shen Yi-ming உள்ளிட்ட மூவர் இதுவரையில் மீட்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.