TikTok செயலியை பாதுகாப்பானதாக மாற்ற புதிய முயற்சி
In அறிவியல் May 2, 2019 11:28 am GMT 0 Comments 4975 by : adminsrilanka

இந்தியாவில் TikTok செயலி மீதான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலியை பாதுகாப்பானதாக மாற்ற அந்நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த செயலி Google Play மற்றும் App Store கிடைக்கின்றது. அதேநேரம் TikTok இம்முறை Online பாதுகாப்பு மற்றும் பயனர் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகின்றது.
TikTok செயலியில் பயனர்களுக்கு Account பாதுகாப்பு பற்றிய விபரங்களை வழங்க செயலியில் வினாவிடை போன்ற அம்சத்தை செயல்படுத்துகின்றது. ஏற்கனவே இதேபோன்ற வினாவிடை அம்சம் ஐரோப்பா முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த புதிய அம்சங்கள் மட்டுமின்றி TikTok செயலியில் புதிதாக அம்சங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் செயலியினுள் பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம் TikTok இந்தியாவுக்கென பிரத்தியேக பாதுகாப்பு மையத்தை ஆரம்பித்தது. எனினும் புதிய பாதுகாப்பு அம்சம் இந்தியாவின் முக்கிய மொழிகளில் கிடைக்கின்றது. இத்துடன் TikTok செயலியில் Notification tape மாற்றியமைக்கப்பட்டு புதிய Controls வழங்கப்படுகின்றது.
இதன் மூலம் பயனர்கள் தங்களது Lock-in சாதனங்களை இயக்க முடியும். இதனால் Accounts Hack செய்யப்படுவதை தவிர்க்க முடியும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.